வாழ்வில் சுமந்த தெய்வமே!

 


வாழ்வில் சுமந்த தெய்வமே!



      இந்த கருங்கல்லை "அனுபவம்”


          என்ற உளியால்


      செதுக்கிய உனக்கு


          நான் எவ்வளவு எழுதினாலும்


      போதுமானதாக இருக்காது!



      வளரும் போது பிள்ளைகளுக்கு


          “ஹீரோ” -வாக தெரியும்


      "அப்பா" குறிப்பிட்ட வயதிற்கு


          மேல் எதிரியாக தெரிவார்.


      ஆனால், நீ எனக்கு


          குழந்தையாக இருக்கும்


      போதும் "ஹீரோ”! தான்


          குமரியாக இருக்கும் போதும்


      நீ எனக்கு "ஹீரோ" தான்



   ஏனென்றால்,



      நீ ஒரு நல்ல


          நடிகன் அப்பா.


      பல கஷ்டங்களை படும்


          நீ என் முன் புன்முறுவல்


      பூத்த முகத்துடனே


          எப்பொழுதும் இருக்கிறாயே!


      உன்னை பற்றி என்ன சொல்ல!


          நான் ஏன் என் பெயரின்


      பின்னால் உன் பெயரை


          எழுதுகிறேன் தெரியுமா?


      ஏனென்றால் ,


          என் வெற்றிக்கு பின்னாலும்


      நீயே,


          என் வெற்றிக்கு முன்னாலும்


      நீயே,


          எனக்கு கிடைத்த முதல்


        வெற்றியும் நீ எனக்கு


          தந்தையாக கிடைத்ததே!





இப்படிக்கு,


உன் அன்பு மகள்,


மாலதி ராஜேந்திரன்




பிறந்து சிறந்த மொழிகளில் சிறந்தே!


 பிறந்த மொழி என் தாய் மொழி தமிழ்!

أحدث أقدم