என்னவனே!
அறியாமை என்ற இருட்டில்
வாழ்ந்த எனக்கு
தெளிவு என்ற வெளிச்சம்
தந்தவன் நீயே!
முன்பெல்லாம் அன்பு என்ற
சொல்லுக்கு அர்த்தங்கள்
பல இடங்களில் தேடினேன்
அன்பானவன் நீ
இருப்பது அறியாமல்,
என்னவனே,
கல்லாக இருந்த என்னை
செதுக்கிய சிற்பி நீயே!
அந்த கடவுள் கூட கேடடால் தான்
தருகிறது வரம்
நீயே கேட்காமலே தருகிறாய்
பல வரம்
பிறருக்கு முள்ளாக தெரிந்த நான்
உனக்கு மட்டும்
ரோஜவாக தெரிகிறேனே எப்படி?
பெற்றோர் மட்டுமே என் உலகம்
என இருந்த என் வாழ்வில்
பெற்றோருக்கு மேலாக
பேரானந்தத்தில் ஆழ்த்தியவன்.
நீயே
என்னவனே,
அறிவுரை கூறுவதில் ஆசானாய்
அன்பு காட்டுவதில் அன்னையாய்
என் கனவுகளை நனவாக்குவதில்
என்னில் ஒருவனான
என்னவனே!
என் வாழ்க்கையில் மலர்ந்த
வாடாத மலரே.
அணையாத தீபச் சுடரே.
உனக்கு நான் என்ன தருவேன்?
விலை கொடுத்து வாங்கி
பல பொருட்கள் தரலாம்.
ஆனால், விலைமதிக்க முடியாத
இந்த வார்த்தைகளே
என்னில் சிறந்தது.
கவிஞர் :
மாலதி ராஜேந்திரன்
பிறந்து சிறந்த மொழிகளில் சிறந்தே!
பிறந்த மொழி என் தாய் மொழி தமிழ்!