கரை💔சேராதக்💔
காதல்!
காதல் என்னும் கடலில் நீந்தத்
தெரியாதவன் அவன்
அலை வடிவில் வந்த "அவள்"
“காதல்” எனும் சிப்பியை தந்தாள்
ஆனால், அச்சிப்பியில்
“திருமணம்" என்ற முத்து
மட்டும் இல்லை
சிப்பியை தந்த அவள்
முத்தினை மட்டும் தர
மறுத்தது ஏனோ?….
கவிஞர்:
மாலதி ராஜேந்திரன்
பிறந்து சிறந்த மொழிகளில் சிறந்தே!
பிறந்த மொழி என் தாய் மொழி தமிழ்!