ஆயிரம் ஜன்னல் வீடு! || மாலதி ராஜேந்திரன்

 

ஆயிரம் ஜன்னல் வீடு!



            அச்சமுடன் வந்த வீடு 


                அனுபவத்திற்கு சிறந்த வீடு


            தோழிகள் நிறைந்த வீடு


                கல்விக்கு திறந்த கதவுடைய வீடு!



            அன்பெனும் அறையில்


                சாதி மதத்தை துறந்து


            ஒற்றுமை என்னும்


                மெழுகுவர்த்தி ஏற்றி


            அணையாது ஒளிரும் வீடு!



            அன்பின் உருவமாக அம்மாவை 


                உவமித்து கஸ்தூரி அம்மா உடன் 


            உருவகப் படுத்திய வீடு!



            துன்பங்கள் பல கடந்து 


                துயரங்களை மறந்து


            என்றும் புன்னகையுடன் 


                எங்கள் துயர் தீர்க்க 


            கனவை நனவாக்க


                கற்றல் சிறக்க!



            அச்சம் அன்பாக மோனை 


                தொடுக்க !


            இன்பம் துன்பமாக எதுகை 


                தொடுக்க!


            மகிழ்ச்சி இயைபாகிட !


                கடினம் முரணாகிட!


            கற்றல் அளபெடுத்து !


                அறிவாற்றல் இரட்டை ஆகின !



            உறவு இல்லாமல் வந்த 


                இந்த உடல்களுக்கு 


            உணர்வு பூர்வமான உறவுகளை 


                தந்தது இந்த வீடு..!



            திருவிழாவில் மட்டும் குத்தாட்டம்


                போட்ட எங்களுக்கு


            தினம் தினம் குத்தாட்டம் போட


                வைக்கும் இனிய இரவுகள்...!



               இரவில் அரட்டை,


                    பகலில் குரட்டை,


            தினம் தினம் எங்களது சேட்டை 


                இவையனைத்தையும் தந்தது 


            எங்களது கந்தர்வ கோட்டை...!



            சுற்றுலா எதற்காக


                இந்த நான்கு 


            சுற்றுச் சுவரே 


                சொர்க்கத்தையே 


            தருகிறது அதற்காக 



            விஜய ஸ்ரீ - அம்மா அவர்களுக்காக 


                பூக்கள் கூட மாலை


            நேரங்களில் வாடிவிடும் 


                ஆனால் இவர்களது 


            புன்னகைத்த கன்னங்கள்


                ஒரு போதும் வாடியதில்லை !






கவிஞர்:

மாலதி ராஜேந்திரன்


பிறந்து சிறந்த மொழிகளில் சிறந்தே!

பிறந்த மொழி என் தாய் மொழி தமிழ்!



Previous Post Next Post